தர்மபுரி ராமக்காள் ஏரிக்கு செல்லும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 7 கட்டிடங்கள் இடிப்பு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்


தர்மபுரி ராமக்காள் ஏரிக்கு செல்லும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 7 கட்டிடங்கள் இடிப்பு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 28 April 2022 2:42 AM IST (Updated: 28 April 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி ராமக்காள் ஏரிக்கு செல்லும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 7 கட்டிடங்களை இடித்ததால் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ரெயில்வே மேம்பாலம் -சவுளுப்பட்டி சாலையில் ராமக்காள் ஏரிக்கு செல்லும் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு காலி செய்யும்படி நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கிடைப்பில் போடப்பட்டு இருந்தது. தற்போது கலெக்டர் திவ்யதர்சினி நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி உத்தரவிட்டார். இந்த நிலையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார் தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் மோகன பிரியா, மாலதி, வெங்கடாசலம், சாம்ராஜ், தாசில்தார் ராஜராஜன் மற்றும் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் 3 பொக்லைன் எந்திரங்கள் கொண்டு ஆக்கிரமிப்பு வீடு மற்றும் வணிக கட்டிடங்களை இடித்து அகற்றினர். இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் மின்சாரத்தை துண்டித்து பல லட்சம் மதிப்புள்ள 7 கட்டிங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இன்றும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story