ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 29 April 2022 12:00 AM IST (Updated: 28 April 2022 4:55 PM IST)
t-max-icont-min-icon

வேளுக்குடி ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

கூத்தாநல்லூர்:-

கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ருத்ர கோடீஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், மஞ்சள் பொடி, வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story