கூத்தாநல்லூரில் 24 மணிநேரமும் குடிநீர் வினியோகிக்கும் வகையில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படும்- நகரசபை தலைவர்


கூத்தாநல்லூரில் 24 மணிநேரமும் குடிநீர் வினியோகிக்கும் வகையில்  புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படும்- நகரசபை தலைவர்
x
தினத்தந்தி 29 April 2022 12:15 AM IST (Updated: 28 April 2022 5:09 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூரில் 24 மணிநேரமும் குடிநீர் வினியோகிக்கும் வகையில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படும் என நகரசபை தலைவர் பாத்திமா பஷீரா கூறினார்.

கூத்தாநல்லூர்:-

கூத்தாநல்லூரில் 24 மணிநேரமும் குடிநீர் வினியோகிக்கும் வகையில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படும் என நகரசபை தலைவர் பாத்திமா பஷீரா கூறினார். 

நகரசபை கூட்டம்

கூத்தாநல்லூர் நகரசபை கூட்டம் நேற்று, நகரசபை தலைவர் பாத்திமா பஷீரா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் சுதர்சன், நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி, என்ஜினீயர் ராஜகோபால், சுகாதார ஆய்வாளர் அருண்குமார் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், வார்டு பகுதிகளில் குடிநீர் குழாய்கள் அமைப்பது, குப்பை தொட்டிகள் வைத்தல், சாக்கடை தூர்வாருதல், சாலைகள் சீரமைப்பு செய்து தருதல், மின் விளக்குகள் அமைத்தல் மற்றும் பராமரிப்பு செய்தல், நகர பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினர்கள் பேசினர்.
பின்னர், உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து நகரசபை தலைவர் பாத்திமா பஷீரா பேசுகையில் ‘விடுபட்ட வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

24 மணிநேரமும்...

சேதம் அடைந்த சாலைகளை சீரமைப்பு செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை தொட்டிகள் இல்லாத இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கவும், குப்பைகள் அள்ளவும், மின் விளக்குகள் அமைக்கவும், சீரமைப்பு செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நகரில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூத்தாநல்லூரில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story