திருச்செந்தூரில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 19 வாகனங்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்


திருச்செந்தூரில் விதிகளை மீறி இயக்கப்பட்ட  19 வாகனங்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 28 April 2022 5:33 PM IST (Updated: 28 April 2022 5:33 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 19 வாகனங்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 19 வாகனங்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூல்
திருச்செந்தூர் பகுதியில் சொந்த பயன்பாட்டு என கூறிக் கொண்டு சிலர் வாகனங்களை வாடகைக்கு விடுவதாகவும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியரை போக்குவரத்து அல்லாத வாகனங்களில் வாடகைக்கு அழைத்து செல்வதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. மேலும், ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி கொண்டு, அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும், சரக்கு வாகனங்களில் அதிகமாக ஆட்களை ஏற்றி செல்வதாகவும், தகுதி சான்று புதுப்பிக்காமல் வாகனங்களை ஓட்டுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. 
வாகன சோதனை
இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் தலைமையில் போக்குவரத்து அலுவலர்கள் கடந்த 3 நாட்களாக திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், சொந்த பயன்பாட்டுக்கான தனியார் வாகனங்களை திருட்டுத்தனமாக வாடகை வாகனமாக இயக்கப்பட்ட 4 ஆம்னி வேன்கள், தகுதி சான்று இல்லாத 10 வாகனங்கள், அதிக பயணிகளை ஏற்றி சென்ற 3 ஆட்டோக்கள், அதிக சரக்கு ஏற்றி சென்ற 2 லாரிகள் ஆகிய வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ரூ.1½ லட்சம் அபராதம்
இந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 
மேலும், இதுபோன்ற விதிமுறை மீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story