கோலாப்பூர் மத்திய சிறையில் ஜெயில் சூப்பிரண்டு மீது கைதி தாக்குதல்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 28 April 2022 6:04 PM IST (Updated: 28 April 2022 6:04 PM IST)
t-max-icont-min-icon

கோலாப்பூர் மத்திய சிறையில் ஜெயில் சூப்பிரண்டை கைது ஒருவர் தாக்கினார்.

புனே, 
கோலாப்பூர் மாவட்டத்தில் கலம்பா மத்திய சிறையில் சஞ்சய் மிஸ்ரா என்ற கைதி அடைக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் நேற்று  ஜெயில் சூப்பிரண்டு சந்திரமணி இந்துல்கர் சிறை வளாகத்தில் சென்ற போது சஞ்சய் மிஸ்ரா அங்கிருந்த தகரத்துண்டினால் தாக்கினார். இதில் சூப்பிரண்டு சந்திரமணி இந்துல்கர் கழுத்து மற்றும் கைகளில் கீறல் ஏற்பட்டு காயமடைந்தார். இதனை கண்ட மற்ற சிறை ஊழியர்கள் வந்து அவரை மீட்டனர். தாக்குதல் நடத்திய கைதி சஞ்சய் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்தனர். 
இவர் ஏற்கனவே ரத்னகிரியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, அங்கு சிறை ஊழியர்களை தாக்கிய சம்பவத்தினால் கலம்பா சிறைக்கு மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. 


Next Story