சமூக வலைத்தளத்தில் சிறுமியின் ஆபாச படத்தை பதிவேற்றிய மாணவர் கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 28 April 2022 6:15 PM IST (Updated: 28 April 2022 6:15 PM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளத்தில் சிறுமியின் ஆபாச படத்தை பதிவேற்றிய மாணவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 
மும்பை ஓசிவாராவை சேர்ந்த அமன் கான் என்ற 22 வயது கல்லூரி மாணவர் மீது சமீபத்தில் சிறுமி ஒருவர் போலீசில் புகார் கொடுத்ததார். இதில் கல்லூரி மாணவர் தனது பெயரில் சமூக வலைதள பக்கத்தில் போலி கணக்கை தொடங்கி அதில் தனது ஆபாச படங்களை பதிவேற்றியதாக தெரிவித்தார். மேலும் தனக்கு வீடியோ கால் செய்து ஆபாசமாக பேசியதாகவும் தெரிவித்தார். 
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த மாணவரின் பெற்றோர் தனது மகன் மீது பொய் வழக்கு பதியப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து மும்பை கமிஷனரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Next Story