கிரித் சோமையா மீதான தாக்குதலை ஏன் தடுக்கவில்லை?- சி.ஐ.எஸ்.எப். டி.ஜி.பி.க்கு மும்பை கமிஷனர் கடிதம்
கிரித் சோமையா மீதான தாக்குதலை ஏன் தடுக்கவில்லை என கேட்டு சி.ஐ.எஸ்.எப். டி.ஜி.பி.க்கு மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே கடிதம் எழுதி உள்ளார்.
மும்பை,
கிரித் சோமையா மீதான தாக்குதலை ஏன் தடுக்கவில்லை என கேட்டு சி.ஐ.எஸ்.எப். டி.ஜி.பி.க்கு மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே கடிதம் எழுதி உள்ளார்.
ஏன் தடுக்கவில்லை?
மும்பை போலீசார் கடந்த சனிக்கிழமை 2 பிரிவினர் இடையே மோதலை தூண்டிய வழக்கில் அமராவதி எம்.பி. நவ்னீத் ரானா, அவரது கணவர் ரவி ரானாவை கைது செய்தனர். இவர்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா கார் போலீஸ் நிலையம் சென்றார். அப்போது அவரது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கிரித் சோமையா லேசான காயம் அடைந்ததாக கூறப்பட்டது.
இந்தநிலையில் கிரித் சோமையா மீது தாக்குதல் நடந்தபோது அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் (சி.ஐ.எஸ்.எப்.) அதை ஏன் தடுக்கவில்லை என கேட்டு சி.ஐ.எஸ்.எப். டி.ஜி.பி.க்கு மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே கடிதம் எழுதி உள்ளார்.
மேலும் தாக்குதல் நடந்த போது சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர் என்பது குறித்து விசாரிக்குமாறும் கடிதத்தில் கூறியுள்ளார்.
பதில் கடிதம்
இந்த தகவலை மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கிரித் சோமையாவுக்கு மத்திய அரசு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல கிரித் சோமையா தாக்கப்பட்ட போது, போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தனர் என கேட்டு மும்பை போலீசுக்கு சி.ஐ.எஸ்.எப்.யும் கடிதம் எழுதி உள்ளதாக கிரித் சோமையாவின் வக்கீல் கூறியுள்ளார்.
----
Related Tags :
Next Story