ஆண் குழந்தைக்கு கலெக்டர் பெயர் சூட்டினார்
ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தைக்கு கலெக்டர் பெயர் சூட்டினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமம் காஞ்சீபுரம் சாலையில் உள்ள விநாயகர் கோவில் அருகில் கடந்த 18-ந்தேதி பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து தூசி கிராம நிர்வாக அலுவலர் அளித்த தகவலின் பேரில் அந்த குழந்தையை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 19-ந்தேதி திருவண்ணாமலை மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் செயல்பட்டு வரும் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் வைத்து கலெக்டர் முருகேஷ் அந்த ஆண் குழந்தைக்கு அருணேஷ் என்று பெயர் சூட்டினார். பின்னர் அந்த குழந்தையை குழந்தைகள் நலக்குழுமத்திடம் ஒப்படைத்தார்.
அப்போது மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் புவனேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story