பெருங்குடி குப்பை கிடங்கில் தீ விபத்து


பெருங்குடி குப்பை கிடங்கில் தீ விபத்து
x
தினத்தந்தி 28 April 2022 6:46 PM IST (Updated: 28 April 2022 6:46 PM IST)
t-max-icont-min-icon

பெருங்குடி குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த பெருங்குடியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் உரம் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென குப்பை மேடு முழுவதும் பரவியது.

இதனால் அந்த பகுதியில் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், அருகில் வசிப்பவர்கள் கண் எரிச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டனர். சுமார். 5 மணி நேரத்துக்கும் மேலாக கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story