தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம்


தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம்
x
தினத்தந்தி 28 April 2022 6:53 PM IST (Updated: 28 April 2022 6:57 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே பணிக்கான தேர்வில் தமிழக விண்ணப்ப தாரர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்காமல் பிற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மதுரை, 
ரெயில்வே பணிக்கான தேர்வில் தமிழக விண்ணப்ப தாரர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்காமல் பிற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ரெயில்வே பணி
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதற்கிடையே, பாதுகாப்பு பிரிவான ஸ்டேசன் மாஸ்டர்கள், கார்டுகள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கொரோனா நோய்ப்பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக இந்த பணியிடங் களுக்கான தேர்வு நடக்கவில்லை.
 இதற்கிடையே, கடந்த 2020-ம் ஆண்டு ஸ்டேசன் மாஸ்டர், சரக்கு ரெயில் கார்டு, டிக்கெட் ஆய்வாளர் உள்ளிட்ட 4 மற்றும் 6-வது கட்ட பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விண்ணப்பம்
இந்த தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் வரை விண்ணப்பித்து இருந்தனர். இதில், தென்னக ரெயில்வே மண்டலத்துக்கு 3 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பம் கோரப் பட்டு இருந்தது. ஆனால் தமிழகத்தில் இருந்து 9 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். 
பின்னர், முதற்கட்ட தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டு திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், தற்போது 2-ம் கட்ட ஆன்லைன் தேர்வுகள் அடுத்த மாதம் 9-ந் தேதி நடக்க உள்ளன. இதில் தென்னக ரெயில்வே மண்டலத்தில் ஒரு பணியிடத்துக்கு 20 பேர் என்ற அடிப்படையில் 60 ஆயிரம் பேருக்கு 2-ம் கட்ட தேர்வுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அதிர்ச்சி
இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு சுமார் 2 ஆயிரம் கி.மீ. தூரமுள்ள வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழக விண்ணப்பதாரர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இது குறித்து, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்ப தாரர்கள் கூறியதாவது:-ரெயில்வேயில் ஒருங்கிணைந்த 4 மற்றும் 6-வது கட்ட (லெவல்) பணியிடங்களுக்கான முதல் கட்ட தேர்வு ஆன்லைனில் நடந்தது. இந்த தேர்வுகள் கேரள மாநிலத்தில் நடந்தன. அப்போது ரெயில்வே தேர்வு வாரியம் மற்றும் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் அலுவலகத ்துக்கு கோரிக்கை மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது 2-ம் கட்ட தேர்வுக்கும் ஆந்திரா, கர்நாடகா, இமாசலபிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங் களில் தேர்வு மையம் ஒதுக்கி உள்ளனர். இது வேலைக்கு விண்ணப்பித்துள்ள எங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலைவாய்ப்பை பறிக்கும்...
ஆன்லைனில் நடத்தப்படும் தேர்வுக்கு வெளிமாநிலங்களில் எதற்காக தேர்வு மையம் ஒதுக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. குறைவான எண்ணிக்கையில் தேர்வு எழுது பவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது தமிழக பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை சிதைப்பதாக உள்ளது. 
இந்த தேர்வை பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட் டோரும் எழுத உள்ளனர். அவர்கள் வெளிமாநிலத்திற்கு பல கி.மீ. தூரம் பயணம் செய்து, தேர்வு மையத்தை கண்டுபிடித்து தேர்வு எழுதுவதற்குள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. எனவே, அந்தந்த மண்டலத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
எதிர்ப்பு
இது குறித்து மதுரை கோட்ட டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வேயை தனியார் மயமாக்குவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக காலிப்பணியிடங்களை நிரப்பாமல் வேண்டுமென்றே காலம்தாழ்த்தி, அந்த பணியிடங்களை சரண்டர் செய்து வருகிறது. அத்தியாவசிய பணியிடங்களுக்கான தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப ்படுகின்றன. ஆனால், தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையில், ஆன்லைன் தேர்வுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியுள்ளது.
மன உளைச்சல்
 இது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தேவையற்ற பொருளாதார செலவு, மன உளைச்சலை ஏற்படுத்துவதாகும். தமிழக இளைஞர்களை வேண்டும் என்றே புறக்கணிக்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் ரெயில்வே தேர்வு வாரியம் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. எனவே, தமிழகத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்திற்குள் தேர்வு மையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story