தொழிலாளர் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
வேலூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
வேலூர்
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுபான கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான கூடங்கள் அனைத்தும் வருகிற 1-ந் தேதி அன்று தொழிலாளர் தினம் என்பதால் மூடப்பட வேண்டும்.
அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.
அந்த நாளில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலும் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்களை ரத்து செய்தல் மற்றும் மதுக்கூட உரிமைதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story