தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல்
வேலூர் பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை ஒழுங்குபடுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர்
வேலூர் பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை ஒழுங்குபடுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பழைய பஸ் நிலையம்
வேலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. எனவே ஏராளமான பஸ்கள் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. எப்போதும் அதிக பயணிகளால் பஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்படும்.
பழைய பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் முறையாக நிறுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பஸ் நிலைய வளாகப்பகுதியில் ஏராளமான இடம் இருந்தும் பல பஸ்கள் பர்மா பஜார் கடைகள் ஓரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தாறுமாறாக பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் அண்ணா சாலையில் இருந்து டவுன் ஹால் பகுதியில் பஸ் நிலையத்துக்கு உள்ளே பஸ்கள் வர முடியாமல் சாலையின் நடுவழியிலேயே நிறுத்துகின்றனர்.
இதனால் அண்ணாசாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தனியார் பஸ்கள் பல மணி நேரம் பஸ்களை பஸ் நிலைய பகுதியில் நிறுத்தி வைக்கின்றனர்.
பஸ்கள் வெகுநேரம் நிறுத்தாமல் உடனுக்குடன் எடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் இடையூறாக நிறுத்தப்படும் பஸ்களை அதிகாரிகள் ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஆட்டோக்கள் மீது நடவடிக்கை
அதேவேளையில், பழைய பஸ் நிலைய வளாகப்பகுதியில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகிறது.
இடையூறாக நிறுத்தப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story