நீலகிரி மாவட்டத்தில் மதுபான காலி பாட்டில் சேகரிக்கும் இடங்கள்


நீலகிரி மாவட்டத்தில் மதுபான காலி பாட்டில் சேகரிக்கும் இடங்கள்
x
தினத்தந்தி 28 April 2022 7:40 PM IST (Updated: 28 April 2022 7:40 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் மதுபான காலி பாட்டில் சேகரிக்கும் இடங்களை கலெக்டர் அம்ரித் அறிவித்து உள்ளார்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில், மதுபானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு காலி மதுபான பாட்டில்களை சாலையோரங்களிலும், வனப்பகுதியிலும், விளை நிலங்களிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் வீசி வருகின்றனர். வனப்பகுதிகளில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் உயிரினங்களுக்கும், பொது இடங்களில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் சுற்றுபுறம் மாசுப்பட்டு நோய் தொற்று ஏற்பட காரணமாகிறது. இதனை தடுக்க காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் பொருட்டு நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் மாவட்ட நிர்வாகத்தால் கீழ்கண்ட இடங்களில் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.  அதன்படி ஊட்டி தலைகுந்தா, பஸ் நிலையம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வன பகுதி அருகில், நகர பேருந்து நிலையம் (ஊட்டி நகர சுகாதார மையம்) டானிங்டன் (மேட்டுப்பாளையம் சாலை) கோத்தகிரி, கோத்தகிரி கட்டபெட்டு, கட்டபெட்டு சந்திப்பு, குன்னூர் பஸ் நிலையம் (ஆக்கிரமிப்பு ஆகற்றிய பகுதி) மேலும், இதன் தொடர்ச்சியாக கீழ்கண்ட இடங்களிலும் காலி மதுபாட்டில்கள் சேகரிக்கும் மையங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மையம் நிறுவப்படும் இடங்கள் பைக்காரா, பஸ் நிலையம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வன பகுதி அருகில், குந்தா பிக்கட்டி கடைவீதி, பாதுகாக்கப்பட்ட வனம். குன்னூர் வண்டிசோலை, பாரஸ்ட்டேல் ரோடு, கூடலூர் நகரம் சில்வர் கிளவுட் அருகில்)ஆகிய இடங்களில் வழங்கலாம். எனவே, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் மாவட்ட நிர்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ள காலி மதுபாட்டிலுக்கான சேகரிக்கும் மையத்தில் காலி மதுபாட்டில்களை ஒப்படைத்து நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதியையும், விளை நிலங்களையும் மற்றும் சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.



Next Story