7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
7 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஊட்டி,
7 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறுமி பலாத்காரம்
நீலகிரி மாவட்டம் குந்தா பிக்கட்டி பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் என்ற மணிகண்டன் (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அந்த தேயிலைத் தோட்டத்தில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் தங்களது குடும்பத்துடன் தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியை வாயைப் பொத்தி, வீட்டின் பின்புறம் இருந்த கழிவறைக்கு தூக்கி சென்று மைக்கேல் பாலியல் பலாத்காரம் செய்தார்.
20 ஆண்டு சிறை தண்டனை
இதுகுறித்து ஊட்டி புறநகர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா, 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மைக்கேல் என்ற மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில் குமார் ஆஜராகினார்.
Related Tags :
Next Story