15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்


15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 April 2022 8:12 PM IST (Updated: 28 April 2022 8:12 PM IST)
t-max-icont-min-icon

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தினர் மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை, ஏப். 29-
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தினர் மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருந்தாளுனர்கள்
தமிழகத்தில் 1,200-க்கும் அதிகமான மருந்தாளுனர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டைய மருந்தாளுனர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கும் அரசாணை எண் 5 ரத்து செய்ய வேண்டும், மருந்தாளுனர்கள், தலைமை மருந்தாளுனர்கள், மருந்துக் கிடங்கு அலுவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதுரையின் பல இடங்களில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கோரிக்கையை விளக்கி பேசினார். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக சுகாதார செயலாளர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், தற்போது வரை இவை நிறைவேற்றப்படாததன் காரணமாக இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
புறநகர் மாவட்டம்
இதுபோல், விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அலுவலகம் முன்பு மாலையில் மதுரை புறநகர் மாவட்ட மருந்தாளுனர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புறநகர் மாவட்டத் தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி கோரிக்கைகளை விளக்கி பேசினார். 
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் பரமசிவம், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். மாநிலச் செயலாளர் முருகன் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் ஏசுதாஸ், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story