எஸ்.ஐ. தேர்வு முறைகேடுக்கு காரணமான அதிகாரிக்கு நல்ல பதவியா?; சித்தராமையா கண்டனம்
எஸ்.ஐ. தேர்வு முறைகேடுக்கு காரணமான அதிகாரிக்கு நல்ல பதவி கொடுப்பதா என சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பி.எஸ்.ஐ.) தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இன்னும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த முறைகேடுகளுக்கு போலீஸ் நியமன பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அம்ரித் பால் மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தியது.
இந்த நிலையில் கூடுதல் டி.ஜி.பி. அம்ரித் பால் நேற்று பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இதுகுறித்து சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "களங்கத்தை சுமக்கும் கூடுதல் டி.ஜி.பி. அம்ரித் பால் பணி இடமாற்றம் செய்யப்பட்டு முக்கிய பிரிவான உள்நாட்டு பாதுாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அவருக்கு நல்ல பதவி வழங்கி மாநில அரசு பரிசு வழங்கியுள்ளது. இது எதை வெளிப்படுத்துகிறது. அவரையும், பா.ஜனதா தலைவர்களையும் பாதுகாக்க இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா?.
இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story