இந்தி மொழியை கற்றால் என்ன தவறு; மந்திரி அஸ்வத் நாராயண் கேள்வி
இந்தி மொழியை கற்றால் என்ன தவறு என மந்திரி அஸ்வத் நாராயண் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கா்நாடகத்தில் கன்னட மொழியை வளா்க்க நாம் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாம், இந்திய மொழியான இந்தியை கற்றால் என்ன தவறு உள்ளது. கன்னடம் கற்றலை கட்டாயப்படுத்த எங்கள் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் எதிர்காலத்தில் கன்னடம் கற்பது தவிர்க்க முடியாத நிலை வரும்.
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கன்னடத்திலேயே தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் கற்பித்தலை ஆங்கிலத்துடன் கன்னடத்திலும் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். வெறும் பேச்சில் மட்டும் அல்லாமல் செயல்பாட்டில் கன்னடத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
Related Tags :
Next Story