கிராமசபை கூட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்


கிராமசபை கூட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 28 April 2022 9:43 PM IST (Updated: 28 April 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே கிராமசபை கூட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சிகளில் வருகிற மே 1-ந்தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் கிராம சபை கூட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் ஆற்காடு அருகே விளாபாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. 

கூட்டத்துக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள தீர்மானங்கள் குறித்தும், கிராமப்புறங்களில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும், கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் இல்லாத நிலையை அடைய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதில் ஊராட்சிமன்றத் தலைவர்கள் துணைத் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் 1500 முருங்கை மற்றும் பப்பாளி ஊட்டச்சத்து செடிகளை அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் நட்டு பராமரிக்க  கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். 

இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, திமிரி ஒன்றிய குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சிவகுமார், உதவி கலெக்டர்கள் மணிமேகலை, சத்திய பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், ஜெயஸ்ரீ, தாசில்தார்கள் கோபாலகிருஷ்ணன், சமீம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story