வீட்டு உணவுக்கு அனுமதி கேட்டு நவ்நீத் ரானா எம்.பி. கோர்ட்டில் மனு
வீட்டு உணவுக்கு அனுமதி கேட்டு நவ்நீத் ரானா எம்.பி. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மும்பை,
அமராவதி எம்.பி. நவ்நீத் ரானா மும்பையில் உள்ள முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் வீட்டின் முன் அனுமன் பஜனை பாடப்போவதாக அறிவித்து இருந்தார். இதன்காரணமாக நகரில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து 2 பிரிவினர் இடையே மோதலை தூண்டியதாக நவ்நீத் ரானா, அவரது கணவர் ரவி ரானாவை கடந்த சனிக்கிழமை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் 2 பேரும் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் நவ்நீத் ரானா பைகுல்லா ஜெயிலிலும், ரவி ரானா தலோஜா ஜெயிலிலும் உள்ளனர். இந்தநிலையில் 2 பேரும் ஜெயிலில் வீட்டு உணவுக்கு அனுமதி கேட்டு மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர். நவ்நீத் ரானா, ரவி ரானாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அப்போது வீட்டு உணவுக்கு அனுமதி தொடர்பான விசாரணையும் நடைபெறும் என கூறப்படுகிறது.
----
Related Tags :
Next Story