வங்கிக்கடன் பெற நடந்த மதிப்பீட்டு முகாமில் 182 பேர் விண்ணப்பித்தனர்


வங்கிக்கடன் பெற நடந்த மதிப்பீட்டு முகாமில் 182 பேர் விண்ணப்பித்தனர்
x
தினத்தந்தி 28 April 2022 9:56 PM IST (Updated: 28 April 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் வங்கிக்கடன் பெற நடந்த மதிப்பீட்டு முகாமில் 182 பேர் விண்ணப்பித்தனர்.

திருப்பூர்
திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் வங்கிக்கடன் பெற நடந்த மதிப்பீட்டு முகாமில் 182 பேர் விண்ணப்பித்தனர்.
வங்கிக்கடன்
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், திருப்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு மற்றும் ஆவின் நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி முருகேசன், மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி அலெக்சாண்டர், இணை பதிவாளர் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க கடன் கேட்டு மனு கொடுத்தனர். அவர்களின் மனுக்களை ஆய்வு செய்து கடன் பெற தகுதியான விண்ணப்பங்களை அந்தந்த வங்கிகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக தொழில் தொடங்க மூன்றில் ஒரு பங்கு அதாவது அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் மானியத்துடன் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதுபோல் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
182 பேர் விண்ணப்பித்தனர்
நேற்று நடந்த முகாமில் 182 பேர் வங்கிக்கடன் கேட்டு விண்ணப்பித்தனர். இதில் மாவட்ட தொழில் மைய கடன் பெற 21 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களின் விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்து வங்கிக்கடன் பெற பரிந்துரை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

Next Story