ஆரணி பேரூராட்சிமன்றக் கூட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் தீர்மானம்
ஆரணி பேரூராட்சிமன்றக் கூட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சிமன்ற கூட்டம் மன்ற வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்துக்கு பேரூராட்சி மன்ற தலைவர் எம்.ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வக்கீல் க.சுகுமார், செயல் அலுவலர் எஸ்.கலாதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், ஆரணி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குரங்குகள், நாய்கள், பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளதால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது என்பது உள்ளிட்ட 45 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நியமன குழு உறுப்பினரும், கவுன்சிலருமான டி.கண்ணதாசன், பொன்னரசி நிலவழகன், சந்தானலட்சுமி ஓம் சக்திகுணபூபதி, பிரபாவதி சேஷாத்ரி, குமார், வக்கீல் சதீஷ் உள்ளிட்ட 15 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். மன்ற பொருட்களை பேரூராட்சி இளநிலை உதவியாளர் முருகவேல் வாசித்தார். முடிவில், பேரூராட்சி இளநிலை உதவியாளர் யுவராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story