சாக்லெட் தருவதாக கூறி- சிறுமியை கடத்தி கற்பழித்த டெம்போ டிரைவர் கைது
சாக்லெட் தருவதாக கூறி சிறுமியை கடத்தி கற்பழித்த டெம்போ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
சாக்லெட் தருவதாக கூறி சிறுமியை கடத்தி கற்பழித்த டெம்போ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி மீட்பு
மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 26-ந்தேதி மாலை அலங்கோலமான நிலையில் மறைவான இடத்தில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தாள். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சம்பவம் குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். பயத்துடன் இருந்த சிறுமியை ஆசுவாசப்படுத்தி விசாரித்தனர்.
டிரைவர் கைது
இதில் ஆசாமி ஒருவர் சாக்லெட் தருவதாக கூறி மறைவான இடத்திற்கு சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் டெம்போ டிரைவர் சச்சின் சாமா (வயது35) என்பவர் தான் சிறுமியை கடத்தி கற்பழித்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் துரித விசாரணை நடத்தி சிறுமியை கற்பழித்த டிரைவரை பிடித்து கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story