குடிசை வீட்டில் திடீர் தீ
குரிசிலாப்பட்டு அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட திடீர் தீயால் பொருட்கள் எரிந்து நாசமானது
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தாலுகா குரிசிலாப்பட்டு அருகே உள்ள பிச்சனூர் கிராமத்தில் வசிப்பவர் ராணி (வயது 65). இந்த நிலையில் அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்தது.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் பார்த்து உள்ளே இருந்த ராணியை வெளியே அழைத்து வந்தனர். இதில் ராணிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.
பின்னர் அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதற்குள் தீ மளமளவென பரவி வீட்டில் உள்ளே இருந்த ரூ.30 ஆயிரம், நெல் மூட்டைகள், துணிகள் மற்றும் மளிகை சாமான்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாக காந்திமதி கொடுத்த புகாரின் பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story