விதைப்பண்ணை வயலில் வேளாண் அதிகாரி ஆய்வு


விதைப்பண்ணை வயலில் வேளாண் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 28 April 2022 10:45 PM IST (Updated: 28 April 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே விதைப்பண்ணை வயலில் வேளாண் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தில் மணிலா, உளுந்து விதைப் பண்ணை வயல்கள் அமைத்து விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். இந்த வயல்களை கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த விவசாயிகளிடம் உளுந்து பயிர் பூக்கும் போது பயறு ஒண்டர் நுண்ணூட்ட கலவையினை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் தெளிக்க வேண்டும். மேலும் மணிலா பயிரில் ஜிப்சம் மற்றும் நுண்ணூட்டச்சத்து இடுவதின் அவசியம் குறித்தும் விளக்கி கூறினார். தொடர்ந்து விதைப்பண்ணை வயல்களை முறையாக பராமரித்து, தரமான விதைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது வேளாண்மை துணை இயக்குனர் (திட்டம்) சுந்தரம், வேளாண்மை உதவி இயக்குனர் தங்கராஜ், வேளாண்மை அலுவலர் வனிதா, உதவி விதை அலுவலர் மொட்டையப்பிள்ளை, உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வராஜ், ரகுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story