மகா மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா


மகா மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா
x
தினத்தந்தி 28 April 2022 11:00 PM IST (Updated: 28 April 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே, மகா மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது.

குத்தாலம்
 குத்தாலம் அருகே திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாலங்காடு கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் கோவில் உள்ளது. நாய்க்கடி போன்ற பிரச்சினைகளுக்கு இந்த கோவிலில் மந்திரிக்கப்பட்டால் நோய் தீரும் என்பது ஐதீகம்.‌ 
இந்த கோவிலில் சித்திரை மாத பால்குட திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று காவிரி ஆற்றங்கரை விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.
வீதி உலா
 பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு செண்டை மேளங்கள் முழங்க அம்மன் வீதிஉலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படி உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Next Story