கீழ்வேளூரில் புதிதாக திறக்கப்பட்ட வேளாண்மை கல்லூரி- ஆராய்ச்சி நிலையத்தில் கலெக்டர் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்
கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை நேற்று காணொலிக்காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சிக்கல்:
கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை நேற்று காணொலிக்காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து கீழ்வேளூர் அருகே குருக்கத்தி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றினார். வேளாண்மை கல்லூரி பொறுப்பு அதிகாரி சந்திரசேகரன் வரவேற்றார்.தமிழ்நாடு மீன்வளர்ச்சிகழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். .இதில் வேளாண்மை இணை இயக்குனர் அகண்டராவ், ஆத்மா குழு தலைவர் கோவிந்தராசன், கீழ்வேளூர் ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன், துணைத்தலைவர் புருஷோத்தமதாஸ், பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி, ஊராட்சி தலைவர் வெண்ணிலா பாபு மற்றும் வேளாண்மை கல்லூரி அலுவலர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆண்டு தொடங்கப்பட்ட வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 29 மாணவிகளும், 13 மாணவர்களும் என மொத்தம் 42 பேர் சேர்ந்துள்ளனர்.
Related Tags :
Next Story