மே தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் மதுக்கடைகள் மூடல் கலெக்டர் உத்தரவு
மே தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் மதுக்கடைகள் மூடல் கலெக்டர் உத்தரவு
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு உத்தரவின்படி நாளை மறுநாள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூடி வைக்க வேண்டும்.
இதை மீறி நாளை மறுநாள் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்களை திறந்தாலோ அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story