விவசாயி மர்மச்சாவு
விவசாயி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 63), விவசாயி. இவர் தனது வயலில் சோளப்பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றிருந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது கோவிந்தராஜ் அவரது வயலில் ஒரு பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கோவிந்தராஜியின் மகன் வக்கீல் குணாளன் அரும்பாவூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கோவிந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாரேனும் அடித்துக்கொலை செய்தனரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்தாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story