நாமக்கல்லில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 April 2022 11:21 PM IST (Updated: 28 April 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றி, அவர்களின் சுயமரியாதையை பாதுகாத்திட வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் உருவாக்கப்பட்ட கூடுதல் தேவை பணியிடங்களுக்கு பணி நிரவலில் மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் இருக்கின்ற அவல நிலையை களைந்து அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கிட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பள்ளிகள் முன்பு கருப்பு பட்டை (பேட்ஜ்) அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில பொருளாளர் மலர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி பாண்டியன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Next Story