இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெருமுனை பிரசாரம்
சங்கராபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க கோரி சைக்கிள் பயணம் நடைபெற்று வருகிறது. இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தெருமுனை பிரசாரம் சங்கராபுரத்தில் நடைபெற்றது. இதில் புதிய தொழிற்சாலைகளை அமைத்து புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். நிகழ்ச்சியில் வட்ட தலைவர் பாஸ்கர், செயலாளர் வெங்கடேசன், துணைச்செயலாளர் முரளி, துணைத்தலைவர் சங்கர், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story