காய்கறி கடையில் பணம் திருட்டு


காய்கறி கடையில் பணம் திருட்டு
x
தினத்தந்தி 28 April 2022 11:38 PM IST (Updated: 28 April 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

உளுந்துர்பேட்டையில் காய்கறி கடையில் பணம் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் திருவெண்ணெய்நல்லூர் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது கடையின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர் ஒருவர் உள்ளே புகுந்தார். பின்னர் அங்கு கல்லா பெட்டியில் இருந்த ஆயிரம் ரூபாயை திருடிச்சென்றார். இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை பார்த்தபோது, சிறுவன் ஒருவன் பணத்தை திருடிச்சென்றது தெரிந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story