மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு


மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 28 April 2022 11:41 PM IST (Updated: 28 April 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

தாமரைக்குளம், 
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குருவாலப்பர் கோவில் ஊராட்சிக்குட்பட்ட கொக்கரனை கிராமத்தில் இருளர், குறவர், வன்னியர் என 59 குடும்பங்கள் மற்றும் பல்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் சமத்துவபுரத்தை போல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், மேற்கண்ட பகுதி நீர்வள ஆதார அமைப்புக்கு சொந்தமானது. எனவே 21 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட வீடுகளில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் குருவாலப்பர் கோவில் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் கமலா தலைமையில் கைக்குழந்தைகளுடன் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் ரமணசரஸ்வதியிடம் மனு அளித்தனர். அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட இணை செயலாளர் அன்பழகன் உள்பட பலர் உடன் இருந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தங்களுடைய வீடுகளை இடித்தால் தங்குவதற்கு வேறு இடம் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

Related Tags :
Next Story