60 நொடியில் 75 சுதந்திர போராட்ட வீரர்கள் பெயரை கூறிய அரசு பள்ளி மாணவ-மாணவிகள்


60 நொடியில் 75 சுதந்திர போராட்ட வீரர்கள் பெயரை கூறிய அரசு பள்ளி மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 28 April 2022 11:45 PM IST (Updated: 28 April 2022 11:45 PM IST)
t-max-icont-min-icon

நாகை நம்பியார் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடந்தது

வெளிப்பாளையம்:
நாகை நம்பியார் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கவுன்சிலர் சுரேஷ் வரவேற்றார். நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் ஆகியோர் பேசினர்.நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் 75 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை 60 நொடியில் கூறி சாதனை படைத்தனர்.இதை பாராட்டி மாணவ, மாணவிகளுக்குதனியார் நிறுவனம் சான்றிதழ் வழங்கியது.இதற்கான ஏற்பாடுகளை நம்பியார் நகர் கிராம பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர். முடிவில் பள்ளி தலைமையாசிரியர் உலகாம்பிகை நன்றி கூறினார்.

Next Story