மின் இணைப்பு வழங்க ரூ.3,500 லஞ்சம் வாங்கிய இடைத்தரகர் கைது


மின் இணைப்பு வழங்க ரூ.3,500 லஞ்சம் வாங்கிய இடைத்தரகர் கைது
x
தினத்தந்தி 28 April 2022 11:50 PM IST (Updated: 28 April 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

கமுதி அருகே மின் இணைப்பு வழங்க ரூ.3,500 லஞ்சம் வாங்கிய இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.

கமுதி,

 மின் இணைப்பு வழங்க ரூ.3,500 லஞ்சம் வாங்கிய இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.

ரூ.3,500 லஞ்சம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமத்துக்கு உட்பட்ட உடையநாதபுரத்தை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது 43). இவர் மதுரையில் உள்ள உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக உள்ளார். இவர் உடையநாதபுரத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். இதற்கு தற்காலிக மின் இணைப்பு பெற அவர் விண்ணப்பித்துள்ளார்.
 மின் இணைப்பு வழங்க அபிராமம் மின்வாரிய உதவி பொறியாளர் விஜயகுமார் ரூ.3500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகலிங்கம் இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின்படி நாகலிங்கம் பணம் கொடுக்கச் சென்ற போது அபிராமத்தைச் சேர்ந்த இடைத்தரகர் சேகர் (32) என்பவரிடம் உதவி பொறியாளர் கொடுக்கச் சொல்லி உள்ளார். 

கைது

அதன்படி சேகரிடம் ரூ.3500 கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் சேகரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் நாகலிங்கம் உடன் பேசிய கைபேசி உரையாடல் பதிவுகள் அடிப்படையில் உதவி பொறியாளர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் விஜயகுமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story