வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தூங்கிக்கொண்டிருந்த மாணவர் பலி
போளூரில் வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கி கொண்டிருந்த பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடன் தூங்கிய அண்ணன் படுகாயம் அடைந்தார்.
போளூர்
போளூரில் வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கி கொண்டிருந்த பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடன் தூங்கிய அண்ணன் படுகாயம் அடைந்தார்.
மீன் வியாபாரி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அங்காளபரமேஸ்வரி தெருவில் வசிப்பவர் செல்வி (வயது 40). இவர் மீன் வியாபாரம் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். இவருடைய கணவர் நடராஜன் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு அனுசுயா என்ற மகளும், வினோத்குமார் (17), தினகரன் (16) என்ற மகன்களும் உண்டு.
அனுசுயாவுக்கு திருமணமாகி விட்டது. மூத்தமகன் வினோத்குமார் போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இளையமகன் தினகரன் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு அனைவரும் படுத்துத் தூங்கினர். வீட்டில் மின்விசிறி (சீலிங் ேபன்) ஓடி கொண்டிருந்தது.
மேற்கூரை இடிந்து விழுந்தது
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் செல்வி எழுந்து வீ்ட்டின் வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். காலை 6 மணியளவில் வீட்டுக்குள் ஏதோ இடிந்து விழும் சத்தம் கேட்டது. செல்வி வீட்டுக்குள் ஓடிச்சென்று பார்த்தார். அப்போது வீட்டின் கான்கிாீட் மேற்கூரை இடிந்து விழுந்து கிடந்தது.
அதோடு ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியும் கீேழ விழுந்து கிடந்தது. தூங்கி கொண்டிருந்த இரு மகன்களும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தனர். மகன்களை பார்த்து கூச்சலிட்டு கதறி அழுத செல்வி அங்கிருந்தவர்களின் உதவியோடு இரு மகன்களை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு, அவர்களுக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் ேசர்த்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி இளைய மகன் தினகரன் நேற்று காலை 9.45 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். மூத்த மகன் வினோத்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போளூரில் சோகம்
இதுகுறித்து போளூர் போலீசில் புகார் ெசய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பள்ளி மாணவர் பலியான சம்பவம் போளூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story