இலங்கையில் இருந்து தொண்டிக்கு படகில் வந்திறங்கிய 2 வாலிபர்கள்
இலங்கையில் இருந்து தொண்டிக்கு படகில் வந்திறங்கிய 2 வாலிபர்கள் தீவிர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டி,
இலங்கையில் இருந்து தொண்டிக்கு படகில் வந்திறங்கிய 2 வாலிபர்கள் தீவிர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.
2 வாலிபர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 75 பேர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அகதிகளாக ராமேசுவரம் வந்துள்ளனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரையில் படகுடன் 2 வாலிபர்கள், அகதிகளாக வந்துள்ளதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற கடலோர போலீசார் அந்த 2 வாலிபர்களை பிடித்து மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் 2 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (வயது 27), அருள்ராஜ் (32) என்பது தெரிய வந்தது. அவர்கள் வந்த படகையும் கடலோர போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். படகில் மீன்பிடி சாதனங்கள் மட்டுமே இருந்தன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அனைத்து பொருட்களின் விலை உயர்ந்து உள்ளதாலும், அங்கு வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மீன் பிடிக்கச் செல்வது போல் படகில் புறப்பட்டு, அகதியாக வந்துள்ளதாக ெதரிவித்துள்ளனர். ஆனால் இலங்கையில் இருந்து இவர்களது குடும்பத்தினர் யாரும் வரவில்லை. இந்த 2 வாலிபர்கள் எந்த உடைமையும் இல்லாமல் படகுடன் தொண்டி கடற்கரையில் வந்து இறங்கியது போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக்குப்பின் கைது
இந்த 2 ேபர் குறித்து இலங்கையில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தியது குறித்து போலீசார் கூறுகையில், “இவர்கள் இருவர் மீதும் இலங்கையில் கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. உண்மையிலேயே அகதியாக வந்தவர்கள் தானா? அல்லது அகதிகள் போர்வையில் வேறு ஏதேனும் கடத்தல் பொருட்களை கொண்டு வந்தார்களா அல்லது இங்கிருந்து ஏதேனும் பொருட்களை கடத்தி செல்ல திட்டமிட்டனரா? என்ற ேகாணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிேறாம்” என்று தெரிவித்தனர். இதற்கிடையே தீவிர விசாரணைக்கு பின்னர் 2 வாலிபர்களையும், அகதியாக பதிவு செய்யாமல் இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகு மூலம் தமிழகம் தப்பி வந்ததாக பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story