ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
42 பேர்
ராஜபாளையம் காந்தி சிலை அருகே அரசு மகப்பேறு மருத்துவமனையும், தென்காசி சாலையில் உள்ள இலந்தோப்பு அருகே அரசு பொது மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னையை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் 42 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 5 வருடங்களுக்கு முன் பணியில் சேரும் போது பெண் துப்புரவு பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.8500-ம், பாதுகாப்பு பணியாளர்களுக்கு ரூ.12 ஆயிரமும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 5 வருடங்களாக துப்புரவு தொழிலாளர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் மாதம் ரூ.4500-ம், பாதுகாப்பு பணியாளர்களுக்கு ரூ.7500-ம் வழங்கப்பட்டு வந்துள்ளது. விடுமுறைக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. பிடித்தம் செய்யப்பட்ட ஊதியம் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் என ஒப்பந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 5 ஆண்டுகளாகியும் இது வரை பிடித்தம் செய்யப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை.
ஆர்ப்பாட்டம்
மேலும் அடுத்த மாதத்துடன் ஒப்பந்தம் நிறைவடையும் நிலையில், புதிதாக ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனம் தங்களின் மாத ஊதியத்தை 4,400 ஆக குறைத்து விட்டதாகவும், இதுகுறித்து கேட்டால் முறையான பதில் இல்லை எனவும் கூறி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரே நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், நிலுவையில் உள்ள தங்களின் ஊதியத்தை தர மறுக்கும் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும், தங்கள் ஊதியத்தை பெற்றுத் தரவும், தற்போதுள்ள விலைவாசியை கருத்தில் கொண்டு தேவைக்கு ஏற்ற புதிய ஊதியத்தை நிர்ணயிக்க அரசும், மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர் நலத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story