தேங்காய் உரிக்கும்போது கம்பியில் தவறிவிழுந்து தொழிலாளி பலி
தேங்காய் உரிக்கும்போது கம்பியில் தவறிவிழுந்து தொழிலாளி பலி
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதூரில் மாரியப்பன் என்பவர் தேங்காய் கடை நடத்தி வருகிறார். வத்திராயிருப்பு கீழத்தெருவை சேர்ந்த லிங்கம்(வயது 36), மாரியப்பனின் தேங்காய் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது தேங்காய் கை வழுகியதில் தேங்காய் உரிக்கும் கம்பியின் மீது விழுந்ததில் நெஞ்சில் கம்பி குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த லிங்கத்தை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த லிங்கத்திற்கு செல்வி(32) என்ற மனைவியும், கவி(10) என்ற மகனும் உள்ளனர்.
Related Tags :
Next Story