ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி
ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி
காரியாபட்டி
காரியாபட்டி அருகே தோப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தவேல் (வயது 68), இவரது மனைவி ரத்தினம்(60) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த ரோசலின்(48) ஆகியோர் காரியாபட்டியில் இருந்து தோப்பூர் செல்வதற்கு ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை மேல காஞ்சிரங்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் ஓட்டினார். காரியாபட்டி-திருச்சுழி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ திடீரென்று சாலையோரம் கவிழ்ந்தது. இதில் கந்தவேல், அவரது மனைவி ரத்தினம் மற்றும் ரோசலின் ஆகிய 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. காயம் பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் டாக்டர் பரிசோதனை செய்தபோது கந்தவேல் இறந்துவிட்டது தெரியவந்தது. ரோசலின், ரத்தினம் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story