சூளகிரி அருகே ஊருக்குள் புகுந்த புள்ளிமானை கடித்து குதறிய தெருநாய்கள்-வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்
சூளகிரி அருகே ஊருக்குள் புகுந்த புள்ளிமானை தெருநாய்கள் கடித்து குதறின. அந்த மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்.
சூளகிரி:
சூளகிரி காட்டுப்பகுதிகளில் மான்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் மான்கள் தண்ணீருக்காகவும், இரை தேடியும் காட்டில் இருந்து வெளியேறி அடிக்கடி கிராமங்களுக்கு வருகின்றன. அவ்வாறு கிராமங்களுக்கு வரும் மான்களை, தெருநாய்கள் விரட்டிச்சென்று கடித்து காயப்படுத்துவதும் நிகழ்கின்றன.
நேற்று சூளகிரி அருகே வேம்பள்ளி கிராமத்திற்கு புகுந்த ஆண் புள்ளிமான் ஒன்றை, தெரு நாய்கள் கூட்டமாக விரட்டிச்சென்று கடித்தன. உயிருக்கு பயந்து, நாய் கூட்டத்தில் இருந்து தப்பிச்சென்ற புள்ளிமான், அந்த பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி என்பவரது தோட்டத்தில் பதுங்கியது. பின்னர் பொதுமக்கள் அந்த மானை மீட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று மானை மீட்டு கோபசந்திரத்தில் உள்ள வனத்துறை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
Related Tags :
Next Story