தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 29 April 2022 12:28 AM IST (Updated: 29 April 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி பாரதியார் சாலையில் உள்ள ரெயில்வே திருமண மண்டபத்தையொட்டி சாலையோரத்தில் பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அதில் விழுந்து காயம் அடையும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் இருந்த பள்ளத்தில் மண்ணை கொட்டி நிரப்பியுள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், திருச்சி.

தேங்கி நிற்கும் கழிவுநீர் 
திருச்சி காந்தி மார்க்கெட்டில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் மார்க்கெட்டிற்கு வரும் மக்கள் நிலைதடுமாறி விழுந்து வருகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதினால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், காந்திமார்க்கெட், திருச்சி. 

தபால் பெட்டி வைக்கப்படுமா? 
திருச்சி உக்கடை அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர்களுக்கு கடிதம் உள்ளிட்டவை அனுப்ப வேண்டும் என்றால் இப்பகுதியில் அஞ்சல் பெட்டி இல்லை. இதனால் வயது முதிர்ந்தவர்கள் தபால் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அரியமங்கலம், திருச்சி. 

குளம் ஆக்கிரமிப்பு 
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, பிராம்பட்டி கிராமம் (தெற்கு) வ.கைகாட்டி பஸ் நிலையம் அருகே உள்ள செட்டிக்குளம் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்பு பகுதியாக மாறி வருகிறது.  இதனால் மழைபெய்யும்போது இந்த குளத்தில் மழைநீர் தேங்காத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பிராம்பட்டி, திருச்சி. 

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய வா ர்டு எண் 58 பகுதியில் அமைந்துள்ள கிராப்பட்டி, அன்பு நகர் மற்றும் அருணாச்சலம் நகர்களுக்கு பாதாள சாக்கடை திட்டம் முடிவடைந்தும் கடந்த 4 மாதங்களாக  சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் மக்கள் நடப்பதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் மிகுந்த சிரமப்பட்டு பல விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அன்பு நகர், திருச்சி. 


Next Story