ஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது
சவாரி செல்வதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
வி.கைகாட்டி,
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி தேளூர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (23). ஆட்டோ டிரைவர்களான இவர்கள் 2 பேருக்கும் சவாரி செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன், சுதாகரை தகாத வார்த்தைகளால் திட்டி செங்கற்களால் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சுதாகர் அளித்த புகாரின் பேரில் கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார்.
Related Tags :
Next Story