மாற்றுத்திறனாளி வாலிபர் மர்மசாவு


மாற்றுத்திறனாளி வாலிபர் மர்மசாவு
x
தினத்தந்தி 29 April 2022 12:45 AM IST (Updated: 29 April 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

தெண்பெண்ணையாற்றில் குளிக்க சென்ற மாற்றுத்திறனாளி வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சி.மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த நடேசன் மகன் ஏழுமலை(வயது 30). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று காலை அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் குறைந்த அளவில் பாய்ந்தோடிய தண்ணீரில் ஏழுமலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வலிப்பு நோயால் பதிக்கப்பட்ட ஏழுமலை ஆற்றில் குளித்தபோது வலிப்பு வந்து நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story