கிராம நிர்வாக அதிகாரிக்கு மிரட்டல்;2 பேர் கைது
கிராம நிர்வாக அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த கூட்டுறவுபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் ஒய்யம்மாள் (வயது 30).சம்பவத்தன்று இந்த அலுவலகத்தின் அருகே அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (39), ரமேஷ் (43) ஆகிய 2 பேரும் மது குடித்துக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்த கிராம நிர்வாக அலுவலர் ஒய்யம்மாள் அவர்களை அங்கிருந்து போகும்படி கூறினார். ஆனால் அவர்கள் போக மறுத்து கிராம நிர்வாக அலுவலரை மிரட்டி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார். .கைதான மணிகண்டன் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story