பெண்ணிடம் சில்மிஷம்; வாலிபர் கைது


பெண்ணிடம் சில்மிஷம்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 April 2022 12:58 AM IST (Updated: 29 April 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம், 

பெண்ணாடம் பகுதியை சேர்ந்தவர் 25 வயது பெண். திருமணமான இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டு வாசலில் படு்த்து தூக்கி கொண்டிருந்தார். அதிகாலை 4.30 மணியளவில் அங்கு வந்த வாலிபர் ஒருவர், தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் சேலையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றதோடு, சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதை உணர்ந்த அந்த பெண் திடுக்கிட்டு எழுந்தததோடு, கணவர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது அந்த வாலிபர் கணவன்-மனைவி இருவரையும் கத்தியை காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார். 

இதுகுறித்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் இறையூர் காந்தி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் கொட்டமுத்து என்கிற வல்லரசு (வயது 22) என்பதும், தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து வல்லரசை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் கைது செய்து விசாரித்து வருகிறார்.

Next Story