தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பம்
தஞ்சை யாகப்பாநகர் பிரதான சாலையோரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு மின்கம்பம் மட்டும் சாலையின் மீது போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் சாலை மீது மின்கம்பம் இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகி வருகி்ன்றனர். அதுமட்டுமின்றி இந்த மின்கம்பத்தினால் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் மீது உள்ள மின்கம்பத்தை சாலையோரத்தில் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சை.
அடிக்கடி மின்தடை
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை புளியங்குடி வடக்குதோப்பு பகுதியில் மின்கம்பத்தை சுற்றி மூங்கில்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் மின்கம்பிகள் மீது மூங்கில்கள் அடிக்கடி சாய்ந்துவிடுகின்றன. இதனால் மின்கம்பிகள் அறுந்து அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும், காற்று வேகமாக வீசும் போதும் மூங்கில் கிளைகள் உரசி மின்தடை ஏற்படுகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மின்தடை ஏற்படாமல் இருக்க முறையான நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சை.
Related Tags :
Next Story