ரப்பர் விலை சரிவு


ரப்பர் விலை சரிவு
x
தினத்தந்தி 29 April 2022 1:08 AM IST (Updated: 29 April 2022 1:08 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை சரிவு

குலசேகரம், 
குமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பால்வடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் ரப்பர் ஷீட் உற்பத்தியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த 3 வாரங்களாக ரப்பர் ஷீட் விலை சரிந்து வருகிறது. கடந்த 4- ந் தேதி வியாபாரி விலையாக ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ.171 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 -ரூ.169 ஆகவும், ஐ.எஸ்.எஸ். - ரூ.155.50 ஆகவும் இருந்தது. இந்த விலை படிப்படியாக குறைந்து நேற்று ஆர்.எஸ்.எஸ்.4- ரூ.162, ஆர்.எஸ்.எஸ்.5-ரூ.159, ஐ.எஸ்.எஸ்.-ரூ.147.50 என காணப்பட்டது. இது குறித்து குலசேகரத்தை ேசர்ந்த ரப்பர் வியாபாரி ஒருவர்  கூறும்போது, ரப்பர் ஆலைகள் கடந்த 2 மாதங்களாக கொள்முதலை குறைத்துள்ளது. மேலும், ரப்பர் பால்வடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதால் விலை சரிந்து வருகிறது, என்றார்.

Next Story