இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்


இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 29 April 2022 1:09 AM IST (Updated: 29 April 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையை அடுத்த களிமேட்டில் தேரின் மீது மின்சாரம் தாக்கிய விபத்தில் 11 பேர் பலியானதை தொடர்ந்து இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்,

வல்லம்:
தஞ்சையை அடுத்த களிமேட்டில் தேரின் மீது மின்சாரம் தாக்கிய விபத்தில் 11 பேர் பலியானதை தொடர்ந்து இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்,
11 பேர் பலியான சம்பவம்
தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜையொட்டி நடந்த தேரோட்டத்தின்போது மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.  
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாதுகாப்பு நடவடிக்கைகள்
களிமேடு கிராமத்தில் நடந்த திருவிழாவின்போது எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சம்பவத்தால் 11 பேர் இறந்த அதிர்ச்சியான சம்பவம் தமிழகத்தை ஆழமான சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த சம்பவம் மனதை பதைபதைக்க வைக்கிறது.
எனவே எதிர்காலத்தில் திருவிழாக்கள் நடைபெறுகிறபோது உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். இதுபோன்று விபத்துகளை தவிர்ப்பதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு வேலை
அரசு வழங்கியிருக்கிற நிதி ரூ.5 லட்சம் என்பது போதுமானதாக இருக்காது. இச்சம்பவத்தில் குடும்பத்துக்கான மொத்த வருமானத்தையும் ஈட்டித் தருகிற தலைவர்கள் இறந்துள்ளனர். நல்ல வேலை செய்யக்கூடிய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 
எனவே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25 லட்சமாக நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதல்-அமைச்சர் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story