திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 29 April 2022 1:12 AM IST (Updated: 29 April 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

களியக்காவிளை, 
மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி மகா தேவர் கோவிலில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று நந்தி பகவான் மற்றும் மூலவரான மகா தேவருக்கு பால், தேன், பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதுபோல், குழித்துறை மகா தேவர் கோவில் உள்பட குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. 

Next Story