சிறுமியை திருமணம் செய்த இட்லி வியாபாரி கைது


சிறுமியை திருமணம் செய்த இட்லி வியாபாரி கைது
x
தினத்தந்தி 29 April 2022 1:47 AM IST (Updated: 29 April 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில், சிறுமியை திருமணம் செய்த இட்லி வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). இவர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் மணிகண்டன் நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

Next Story